ஆப்நகரம்

தமிழ்நாட்டில் உதயமான 5 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி க்கள் நியமனம்..!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்பாணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

Samayam Tamil 15 Nov 2019, 3:16 pm
தமிழ் நாட்டில் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களை பிரித்து புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
Samayam Tamil தமிழ்நாட்டில் உதயமான 5 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி க்கள் நியமனம்..!


அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு. தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகியவை புதிய மாவட்டங்களாக உதயமானது. இதன் அரசாணையை கடந்த 12 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.

ஏமாற்றம் அளித்த வடகிழக்கு பருவமழை? ஆச்சரியம் தரும் பின்னணி காரணம்!

பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் அதனதன் தலைமையிடமாகவே செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய மாவட்டங்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பிக்களை நியமத்துள்ளது.

அதிமுக சரியாக வாதிடாமல் கோட்டைவிட்டது ஏன்: துரைமுருகன் கேள்வி..

அதன் விவரங்கள் வருமாறு, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக கண்ணன், திருப்பத்தூர் எஸ்.பியாக விஜயகுமார், கள்ளக்குறிச்சி எஸ்.பியாக ஜெயச்சந்திரன், தென்காசி எஸ்.பியாக சுகுணா சிங், ராணிப்பேட்டை எஸ்.பியாக மயில் வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி