ஆப்நகரம்

ஏசி மின்கசிவில் மூவர் பலியான சம்பவம்; வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம்!

ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மூவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2019, 3:03 pm
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிபாக்கம் சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் ராஜி(60). இவர் வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய இளைய மகன் கவுதம்(27).
Samayam Tamil Tindivanam Dead


இந்நிலையில் மூவரும் நேற்று முன்தினம் தங்கள் வீட்டின் ஏசி அறையில் உறங்கினர். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டின் மற்றொரு அறையில் இருந்த ராஜூவின் மற்றொரு மகன் கோவர்த்தனனும் அவரது மனைவியும் உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என்று கூறப்பட்டது.

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் 3 பேர் உடல் கருகி பலி

ஆனால் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜீயின் உடலில் ரத்தம் கசிந்துள்ளது. அவர்களது அறைக்கு அருகே காலி மண்ணெண்ணெய் கேன் இருந்துள்ளது. இவை போலீசாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சொத்து பிரச்சனைக்காக மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு, ஏசியில் மின்கசிவு என நாடகம் ஆடுகிறார்களா என்று விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. ராஜீக்கு அதிக சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சூழலில் மூவர் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக, அவர்களது உறவினர் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் வழக்கு விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி