ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த வரதராஜனின் நண்பர் உயிரிழப்பு?

செய்தி வாசிப்பாளர் வரதராஜனின் நண்பர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 Jun 2020, 5:58 pm
செய்தி வாசிப்பாளரும், தொலைக்காட்சி நடிகருமான வரதராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா வார்டில் படுக்கைகள் குறைவாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் தனது நெருங்கிய நண்பருக்கு கொரோனா இருப்பதாகவும், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது எந்த மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதி இல்லை என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
Samayam Tamil செய்தி வாசிப்பாளர் வரதராஜன்


இதனால் அவர் மீது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், கொரோனா தடுப்பு பணியை குறித்து அவதூறு பரப்பியதாகவும் சுகாதாரத்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது, தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒரு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை பகிர்ந்ததற்கு ஆளுங்கட்சியினர் ஒன்றுகூடி வரதராஜனை மிரட்டுவதாக பலதரப்பிடம் இருந்து குற்றசாட்டுகள் எழுந்தன. அதே சமயம், கொரோனா நிலவரம் குறித்து செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வீடியோவாக பதிவிட்டிருந்ததை பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் வெளியே சுற்றிய அவலம்..! சென்னையில் பதற்றம்...

மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சில இதர கட்சிகளும் வரதராஜனுக்கு ஆதரவாக பேசின. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வரதராஜனின் நண்பர் செல்லப்பா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சமையல் வல்லுனராக இருந்த செல்லப்பா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சமைத்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி