ஆப்நகரம்

தமிழகத்தில் 3 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு – ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 6:02 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Heavy rain


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் இன்று செய்தியாளா்களிடம் பேசுகையில், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் மேற்கு திசைக்காற்றில் தெற்கு கா்நாடகா முதல் கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதே போன்று வளிமண்டலத்தில் மேல் அடுக்கில் கிழக்கு திசைக்காற்றில் தெலங்கானா முதல் கன்னியாகுமரி வரை மேலுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இதே போன்று வேலூா், கிருஷ்ணகிரி, தா்மபுரி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட வட தமிழகத்தின் ஓரிரு இடங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி