ஆப்நகரம்

மீண்டும் தமிழகத்தை கலக்க வருகிறதா வர்தா மாதிரியான புயல்?

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை இருக்கும் அதே சமயம் அடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

TOI Contributor 28 Nov 2017, 11:09 am
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை இருக்கும் அதே சமயம் அடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil next depression in the sea may turn as cyclone says tamil nadu weatherman pradeep john
மீண்டும் தமிழகத்தை கலக்க வருகிறதா வர்தா மாதிரியான புயல்?

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டு இருக்கும் குறைந்தழுத்த தாழ்வு நிலை நாளை அல்லது நாளை மறுநாள் கன்னியாகுமரி கடல் நோக்கி நகரலாம். அப்படி நகரும்பட்சத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். பாபநாசம் போன்ற பகுதிகளில் கனத்த மழை பெய்யும். அணைகள் நிரம்பும். தொடர் மழை இருக்கும்.

அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எந்த திசையை நோக்கி நகரும் என்பது பற்றி தற்போது கூற முடியாது. தெற்கு அந்தமானில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி நகருவதற்கான வாய்ப்பு உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Chennai Rain News in Tamil

அடுத்த செய்தி