ஆப்நகரம்

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் நடத்தும் ஆலோசனை!

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

Samayam Tamil 25 Jun 2021, 8:47 am
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடியநிலையில் தற்போது பாதிப்பு குறைந்துவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 60ஆயிரத்தை எட்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர்.
Samayam Tamil tn lockdown


ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் பாதிப்பு 36ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் அதன்பின்னர் குறையத் தொடங்கியது. நேற்று ஒரு நாளில் 6,162பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
பள்ளிகளைத் திறக்க அரசுக்கு பரிந்துரை: எப்போது அறிவிப்பு வெளியாகும்?
தமிழ்நாட்டில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன. பாதிப்பு குறைந்து வருவதால் பிற மாநிலங்கள் பெரியளவில் தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் இம்முறை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. அரசு உயர் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கடந்தமுறை தளர்வுகள் எதுவும் புதிதாக அறிவிக்கப்படவில்லை. இம்முறை அந்த மாவட்டங்களில் ஹார்டுவேர், மின்னனு பொருள்கள் விற்பனை கடைகள், புத்தகக டைகள், காலணி விற்பனை கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு ஏற்கனவே திறக்கப்பட்ட கடைகளுக்கு நேர நீட்டிப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்.
பிரசாந்த் கிஷோரை வளைத்த காங்கிரஸ்? அடுத்த பிரதமர் யார்?சிறியளவிலான நகைக்கடைகள், துணிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும், சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் இந்த தளர்வுகள் வழங்கப்பட்டாலும் கடற்கரை உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களுக்கான தடை தொடரும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி