ஆப்நகரம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: வானிலை மையம்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 24 Mar 2019, 3:45 pm
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Samayam Tamil download


இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:

தமிழகம் கோடையை நெருங்கி வருகிறது. அதன் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. மேலும். சேலம் மற்றும் திருத்தணியில் 103 டிகிரி, வேலூர், தருமபுரியில் தலா 102 டிகிரி, திருச்சி, மதுரையில் தலா 101 டிகிரி, கோவை மற்றும் பாளையன்கோட்டையில் தலா 100 டிகிரி பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்தசில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும். உள் மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட சுமார் 3 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி