ஆப்நகரம்

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர்

அடுத்தாண்டு முதல் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

TNN 5 Aug 2017, 4:23 pm
அடுத்தாண்டு முதல் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil next year jallikattu in chennai says tamilnadu jallikattu federation head rajasekar
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர்


சென்னையில் அடுத்தாண்டு முதல் கோவளம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1000 வீரர்களுடன் 100 காளைகள் பங்குபெற உள்ளதாகவும், ஜல்லிகட்டைப் பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறந்த காளைகள் அழைத்து வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அரசிடம் உரிய அனுமதி பெறப்படும். சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். சென்னையில் நடத்தப்படும் இப்போட்டியில் கலந்து கொள்ள சென்னையில் மாடுபிடி வீரர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இதே போன்று, பார்வையிடும் மக்கள், ஆதார் எண் அல்லது ஏதாவது அரசு அடையாள அட்டையை சமர்ப்பித்து பதிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி