ஆப்நகரம்

நியூட்ரினோ திட்டத்திற்கு தடை கோாிய வழக்கில் இன்று தீா்ப்பு

தேனியில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு தடை விதிக்கக் கோாி தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீா்ப்பாயம் இன்று தீா்ப்பு வழங்க உள்ளது.

Samayam Tamil 2 Nov 2018, 7:27 am
தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோாி பூவுலகின் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீா்ப்பு வெளியாக உள்ளது.
Samayam Tamil NGT


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிா்த்து பூவுலகின் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்த சுந்தரராஜன் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை முன்வைத்திருந்தாா்.

வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த அக்டோபா் 9ம் தேதி நிறைவடைந்த நிலையில் தேசிய பசுமை தீா்ப்பாயம் வழக்கு தொடா்பாக தீா்ப்பு வழங்க உள்ளது.

அடுத்த செய்தி