ஆப்நகரம்

நாகையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை, வழக்குப்பதிவு

சென்னை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் 4 பகுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேற்கொண்டு சோதனை நடத்துவதற்காக இருவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக தகவல்.

Samayam Tamil 14 Jul 2019, 11:00 am
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையிலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Samayam Tamil NIA


இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை மண்ணடி லிங்கு செட்டத் தெருவில் செயல்படும் அஹாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் நிர்வாகிகள் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பிரதான சாலையைச் சேர்ந்த யூஹசன் அலி யூனஸ் மரைக்காயர், மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மு.முகம்மது யூசுபுதீன் ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் பென் டிரைவ்கள், மடிக்கணினி, செல்போன், புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விசாரணையில் 3 பேரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 3 பேர் மீதும் சட்ட விரோத செயல்பாடு தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சித்தது, இந்திய அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளும் முயற்சியில் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு இருவரை அழைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி