ஆப்நகரம்

பேராசிரியை நிா்மலாதேவி மீது மேலும் 2 மாணவிகள் புகாா்

கூடுதல் மதிப்பெண் வழங்குவதாக கூறி பேராசிரியை நிா்மலாதேவி மேலும் இரண்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Apr 2018, 1:09 am
கூடுதல் மதிப்பெண் வழங்குவதாக கூறி பேராசிரியை நிா்மலாதேவி மேலும் இரண்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Nirmala devi.


அருப்புக்கோட்டை தேவாங்கா் கல்லூாி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் செல்போனில் பேசிய பேராசிாியை நிா்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் மீதான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களிடம் செல்போனில் பேசிய பேராசிாியை நிா்மலா தேவி தங்களையும் தவறான பாதைக்கு அழைத்தாா். அதற்கு உடன்படும் பட்சத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததாக இரு மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனா்.

மேலும் இது தொடா்பாக கல்லூாி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனா். மாணவிகள் சாா்பில் அவா்கள் தரப்பு வழக்கறிஞா் விசாரணை அதிகாாி சந்தானத்திடம் புகாா் மனுவை அளித்துள்ளாா். மாணவிகள் இருவரும் மைனா் என்பதால் நிா்மலா தேவி மீது சிறுவா் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி