ஆப்நகரம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தவருக்கு ஜாமீன்!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2019, 12:06 am
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக ஆதாரத்துடன் பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சுமத்தப்பட்டு, அது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil nirmala223-1565001718


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றத்திற்காக பேராசிர்யை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சில காலம் சிறவாசம் அனுபவித்த நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வந்தார்.

ஃபாத்திமா லத்தீஃப் தந்தையிடம் அமித் ஷா கொடுத்த உறுதி!

இந்த வழக்கில் நீர்மலாவுடன், தேவி, முருகன், குப்புசாமி உள்ளிட்டோர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது வழக்கம் போல் நிர்மலா தேவி ஆஜராகவில்லை.

தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிர்மலா தேவி ஆஜராகாதததால் நீதிபதி பிடிவாரண்ட் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலா தேவி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலரை கம்பி எண்ண சொன்ன நீதிபதி !!

நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரான நிர்மலா தேவிக்கு, “இனி வரும் நாட்களில் முறையாக வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கினார்.

அடுத்த செய்தி