ஆப்நகரம்

மீனவர் கொலையை அலட்சியப்படுத்திய நிர்மலா சீதாராமன்!

மீனவர் கொலையை அலட்சியப்படுத்திய நிர்மலா சீதாராமன்!

TOI Contributor 7 Mar 2017, 10:32 pm
சென்னை : மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் டிஜிட்டல் கேம்பஸை தொடங்கி வைப்பதற்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வந்திருந்தார் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மும்மொழி கொள்கை முக்கியமானது என்று கூறினார். மும்மொழி கொள்கை தான் முக்கியம் என்று சொல்கிறோமே தவிர சமஸ்கிருதத்தை பற்றி சொல்லவில்லை என்றார். மும்மொழி கொள்கையை சமஸ்கிருத திணிப்பாக தான் பார்க்கின்றனர் என்று கூறிய நிர்மலா சீதாராமன், மாணவர்கள் மொழிப்பாடங்களை படிப்பதே இல்லை என்று கூறினார். மொழிப்பாடங்களை படித்தால் தான் அறிவு செழும் அடையும் என்று கூறினார்.
Samayam Tamil nirmala seetharaman careless answer about fisherman death
மீனவர் கொலையை அலட்சியப்படுத்திய நிர்மலா சீதாராமன்!


இந்தியாவில் மும்மொழி கொள்கையை பின்பற்றாத பல மாநிலங்கள் உள்ளன என்றும், தமிழகத்தை மட்டும் சொல்லவில்லை என்றார். அப்போது ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொலை செய்யப்பட்டது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, இந்த கேள்வியை அப்புறம் கேளுங்கள் என்று இடை நிறுத்தி மும்மொழி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

அடுத்த செய்தி