ஆப்நகரம்

திருச்சி என்.ஐ.டி.யில் ஐஐடியில் கூட இல்லாத வசதிகள் உள்ளன: பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில்தான் ரூ.190 கோடி மதிப்பில் உயர் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 11:45 pm
திருச்சி என்.ஐ.டி.யில் ஐஐடியில் கூடி இல்லாத உயர் ஆய்வு மையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 66088927


திருச்சி தூய வளனார் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா மற்றும் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில்தான் ரூ.190 கோடி மதிப்பில் உயர் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் 13 ஆய்வக கூடங்கள் உள்ளன. என்ஜினீயரிங் கல்வி மட்டுமிட்றி தொழிற்சாலை திறன் மேம்பாட்டுக்கும் ஊக்கும் அளிக்கும்.” என்றார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப் புரிந்துள்ளது. முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விட இரண்டு மடங்கு திட்டங்கள் மோடி ஆட்சியில் நிறைவேறியுள்ளன.” என்றும் அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி