ஆப்நகரம்

நீடா அம்பானி இன்று மாலை அப்பல்லோ வருகை

சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி இன்று மாலை சென்னை அப்பல்லோ வரவுள்ளார்.

TNN 13 Oct 2016, 5:06 pm
சென்னை: சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி இன்று மாலை சென்னை அப்பல்லோ வரவுள்ளார்.
Samayam Tamil nita ambani visiting apollo by 6pm today
நீடா அம்பானி இன்று மாலை அப்பல்லோ வருகை


கடந்த மாதம் 22-ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என அப்பல்லோ மருதுவமனை தெரிவித்து வரும் நிலையில், தேசிய கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை, தொழில் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வரின் நலன் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி இன்று மாலை சென்னை அப்பல்லோ வரவுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nita Ambani visiting Apollo by 6 pm today JayaHealth #ApolloHospitals #Jayalalitha #DACase #Jayaverdict #JayalalithaHealthCondition #JayalalithaBrainDead #Intensivist #SheelaBalakrishnana

அடுத்த செய்தி