ஆப்நகரம்

மக்களே ஹேப்பி நியூஸ்: நிவர் புயல் நிவாரணம் 25,000 ருபாய்!

நிவர், புரெவி புயல் நிவாரண தொகை ஜனவரி 7ஆம் தேதிக்குள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Jan 2021, 6:14 pm
நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
Samayam Tamil cyclone relief fund


இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரண தொகையான 13 ஆயிரத்து 500 ரூபாய் என்பதை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு ரூ.2,500 கிடைக்கலயா? தமிழக அரசு புதிய அறிவிப்பு!
மானாவாரி நெற் பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7410 ரூபாய் என்பதை 10,000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் 18 ஆயிரம் ரூபாய் என்பதை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும்.
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை: கூட்டணியை உறுதிபடுத்தும் இபிஎஸ்
மேலும் தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்தப் பேரிடரில் அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால் 2 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பைத் தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்ச வரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 பரப்பிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சுமார் 5 லட்சம் விவசாய பெருமக்களுக்கு 600 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என் நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ஜனவரி 7 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்.

அடுத்த செய்தி