ஆப்நகரம்

நெய்வேலி அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்வு

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது

Samayam Tamil 1 Jul 2020, 1:43 pm
தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. என்.எல்.சி. 2ஆம் அனல்மின் நிலையத்தில் 7 அலகுகள் உள்ளன. இங்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil என்.எல்.சி. விபத்து
என்.எல்.சி. விபத்து


இந்த நிலையில், என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5ஆவது அலகில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. கொதிகலன் பிரிவில் 30 மீட்டர் உயரத்தில் நீராவிக் குழாய் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானதில், தொழிலாளார்கள் 17 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் திருச்சி மற்றும் சென்னை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், அனல் மின் நிலையத்தில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

சாத்தான் குளம் விவகாரம்: ‘சத்தியமா விடக் கூடாது’ -ரஜினி எச்சரிக்கை!

இதனிடையே, சம்பவ இடத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், விபத்து தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஏற்படும் விபத்து இதுவாகும். கடந்த மே மாதம் 7ஆம் தேதி பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி