ஆப்நகரம்

Sekar Babu: ஓராயிரம் ரவிகள் வந்தாலும் திமுக ஆட்சியை ஆட்டவும் முடியாது... அசைக்கவும் முடியாது.. சேகர் பாபு அதிரடி!

Sekar Babu: ஓராயிரம் ரவிகள் வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 10 May 2023, 5:15 pm
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறும் வகையில் திமுகவினர் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil No can shake Tamilnadu government Says Minister Sekar Babu


இந்தக் கூட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர். நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விருகம்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, கவர்னர் தன்னை மதிப்பிற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.
Raiza Wilson: ஜாலி மூடில் பிக்பாஸ் ரைஸா வில்சன்... அசத்தல் போட்டோஸ்!
மேலும் அவர் தன்னை நண்பர் என்று குறிப்பிட்டதற்காக ஆளுநர் ஆர்என் ரவிக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் சேகர் பாபு. தொடர்ந்து பேசிய அவர் கொள்கையிலே அவர் எங்களோடு சமரசமாக இல்லை என்றால் நிச்சயமாக கொள்கைக்காக நட்பை துறக்கவும் தயார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நான்கு மாதங்களுக்குள் கொரோனா நோய் தொற்றே இல்லாத மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும் என்றும் அமைச்சர் சேகர் பாபு புகழாரம் சூட்டினார். ஸ்டாலின் முதல்வராக இருக்கும் வரை ஒரு கவர்னர் ரவி அல்ல, ஓராயிரம் ரவிகள் ஒன்று கூடி வந்தாலும், இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றும் சேகர் பாபு தெரிவித்தார்.
Governor RN Ravi: 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு விருது.. கவுரவித்த ஆளுநர் ஆர்என் ரவி!
முன்னதாக நெல்லையில் நடைபெற்ற திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கட்சிகள் கூட கடந்த 2 ஆண்டுகளில் தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறவில்லை, ஆனால் ஆளுநர் ரவிதான் தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறி வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என் ஆளுநர் கூறுவதாகவும் ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக உள்ளது என கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் ஆளுநர் சொல்வதை ஏற்பதா? அல்லது நீதிமன்றம் சொல்வதை ஏற்பதா என்றும் அந்த கூட்டத்தில் துரைமுருகன் காட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Vijay: அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளமா? 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்திக்கும் விஜய்!
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி