ஆப்நகரம்

கொரோனா: சென்னைவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் மாநகராட்சியின் இந்த தகவல்!!

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு அண்மையில் சென்றவர்களில் 3,300 போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆறுதல் அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 Apr 2020, 8:26 pm
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil corona negative


இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளை அரசு தமது முழுகட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் செல்ல போலீசார் தடைவிதித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் சென்னைவாழ் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில்தான் சில நாள்களுக்கு முன் அந்த அதிர்ச்சி தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்தது. "சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் பணியாற்றிவரும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரபல ஷாப்பிங் மாலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!!

எனவே, மார்ச் 10 முதல் 17 ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட தேதிகளில் ஃபீனிக்ஸ் மால் சென்ற 3,300 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா: மண்டலவாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் இதோ!!

கொரோனா பீதியில் ஆழ்ந்துள்ள சென்னைவாசிகளுக்கு, மாநகராட்சி ஆணையரின் இந்த தகவல் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

அடுத்த செய்தி