ஆப்நகரம்

மெரினாவில் கதவில்லா கழிப்பறை : பொது மக்கள் அவதி

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிலையில் , அங்கு கூடுதல் கழிப்பறை வசதி செய்யாததால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Samayam Tamil 16 Jan 2018, 10:34 am
காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிலையில் , அங்கு கூடுதல் கழிப்பறை வசதி செய்யாததால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
Samayam Tamil no doors in toilet public suffers in marina beach during kanum pongal
மெரினாவில் கதவில்லா கழிப்பறை : பொது மக்கள் அவதி


பொங்கலின் மூன்றாவது நாளான காணும் பொங்கல் அன்று பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கடற்கறை மற்றும் சுற்றுலாதளங்களுக்கு செல்வது வழக்கம் . காணும் பொங்கல் என்றாலே மெரினாவில் அதிக அளவு மக்கள் கூட்டம் இருக்கும் . இந்நிலையில் மெரினாவில் பாதுகாப்பிற்காக 15 ,000 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கூடுதல் கழிப்பறை வசதி செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. ஆனால் மெரினாவில் கூடுதல் கழிப்பறை வசதி செய்யப்படவில்லை என்றும் ஏற்கனவே இருக்கும் கழிப்பறைகளில் கதவுகள் கூட இல்லாத நிலை உள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை என்றும் கதவுகள் தாழ்பால் இல்லாத நிலையில் இருப்பதாகவும் பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் கழிப்பறை அசுத்தமாக இருப்பதால் கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படவாய்ப்புள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி