ஆப்நகரம்

தமிழகத்தில் மின் தடைக்கு வாய்ப்பு இருக்கிறதா? அமைச்சர் தங்கமணி பதில் இதுதான்!

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருப்பதால், மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Nov 2019, 2:29 pm
ஈரோடு மாவட்டம் பாசூரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை நேரில் ஆய்வு செய்த மின் துறை அமைச்சர் தங்கமணி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Samayam Tamil Thangamani


அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உள்ளது. எனவே மின்வெட்டு வர வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு கோடையில் 16,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

நடுக்கடலில் 1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்!

நடப்பாண்டில் 17,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் தங்கமணி பதிவிட்டுள்ளார்.

இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து மின் பகிர்மான இயக்குநர் ஹெலன் தலைமையில் அதிகாரிகள் குழு குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மின் வழித்தடங்களில் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

பதினாறு வயதும் பதராகும் பொழுதும் - ரஜினி, கமலை விளாசிய ”நமது அம்மா”

இவை மின் தடை, மின் இழப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து சரிசெய்ய உதவுகின்றன. மேலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தொலைத்தொடர்பு வசதியுடைய ஸ்மார்ட் மீட்டர் முறையில் கணக்கு எடுக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து, தமிழகத்திலும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்படி செய்தால் பலம் தெரிந்துவிடும்- கூட்டணி கட்சிகளுக்கு ’ஷாக்’ கொடுத்த ராஜேந்திர பாலாஜி!

அடுத்த செய்தி