ஆப்நகரம்

தமிழகத்தில் கனமழை பெய்யாது: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கனமழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 8 Aug 2017, 8:47 pm
தமிழகத்தில் கனமழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil no heavy rain in tamilnadu says chennai meteorological department
தமிழகத்தில் கனமழை பெய்யாது: வானிலை ஆய்வு மையம்


காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்தாலும், தமிழகத்தில் கனமழை பெய்யாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், ஆந்திரபிரதேசம் மற்றும் வட தமிழகத்திற்கு இடையில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை கன்னியாகுமரி வரை நிலவுவதால் தமிழக கடலோரப் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனினும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி