ஆப்நகரம்

விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது?- சீமான்!

சீமான் மீது நடிகர் விஜய் ரசிகர்கள் கோபமடைந்த நிலையில் அதற்கு அவர் தக்க பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 25 Dec 2020, 1:16 pm
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலுக்கு கொடுக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்தவொரு நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தனர். தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், ’எங்கள் தளபதியை பற்றி பேச சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்றும், ’ஜில் ஜங் ஜக் சீமானே உடனடியாக மன்னிப்பு கேள்’ என்றும் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு சீமான் இன்று பதிலளித்துள்ளார்.
Samayam Tamil Seeman


சிவகங்கைச் சீமையின் ராணியாக இருந்த வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது?

‘ஜில் ஜங் ஜக் சீமானே’: கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!
ஒரு நடிகர் நடிப்பது மட்டுமே நாடாளத் தகுதி வந்துவிட்டது என்றால் அதை நான் ஏற்கவில்லை. எனது கோட்பாடுகளும் ஏற்காது. தமிழர்களுக்கு முன்மாதிரியே இல்லை என்று கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் வரணும். ரஜினி வரணும் என்றால் வெறுப்பாகாதா? காமராஜர், கக்கன், ஜீவானந்தம், நல்லக்கண்ணு என ஏராளமானோர் எங்களுக்கு இருக்கின்றனர்.

தொடக்கக் காலத்தில் இருந்தே விஜய் தன்னை எவ்வளவு தற்காத்து நின்றார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் என்னுடைய தம்பி. விஜய் மீது பேரன்பு இருக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். அவரது புகழ் வெளிச்சத்தில் மக்களுக்காக நிற்க வேண்டும்.

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு - 'கோப்ரா' செகண்ட் லுக்!
அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. வரட்டும். வந்து மக்களுக்கான அரசியல் செய்யுங்கள். களத்தில் நின்று போராடி மக்களின் நன்மதிப்பை பெற்று வாருங்கள். வெறும் திரைக் கவர்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டை ஆண்டு விடலாம் என்ற எண்ணத்தை கைவிடுங்கள் என்று கூறினார்.

அடுத்த செய்தி