ஆப்நகரம்

சென்னைக்கு ரயில் சேவை ரத்து!!

டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் வெள்ளிக்கிழமை (மே 14), ஞாயிற்றுக்கிழமை (மே 16) மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 May 2020, 6:50 pm
நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.
Samayam Tamil train


இந்த நிலையில், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தலைநகர் டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத், மும்பை, ஹௌரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு இன்று (மே 12) முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை டூ டெல்லி: ரயில் பயணிகள் அறிந்து கொள்ள வேண்டியவை இதுதான்!

இதனிடையே, ' சென்னையில் கொரோனா நோய்தொற்று அதிகம் உள்ளதால், மே 31 ஆம் தேதி வரை இங்கு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை தொடங்க அனுமதிக்கக்கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று (மே 11) நடைபெற்ற காணொளிகாட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். மேலும் இதுதொடர்பாக அவர், ரயில்வே அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் வெள்ளிக்கிழமை (மே 14), ஞாயிற்றுக்கிழமை (மே 16) ஆகிய இருதினங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி? இதோ அறிவிப்பு!

இவ்விரு தினங்களுக்குமான பயண முன்பதிவு முடிவடைந்துள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன் பிறகு, டெல்லியில் இருந்து சென்னைக்கு தற்போது பயணிகள் ரயில் இயக்கப்படாது என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி