ஆப்நகரம்

சட்டமன்றத்தில் கொரோனா விவாதம்; ஒத்திவைக்கப்படுகிறதா கூட்டத்தொடர்?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2020, 12:57 pm
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிப்பு 120ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வருகை புரிந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil தமிழக சட்டமன்றம்


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பின. அதாவது கொரோனா அச்சம் காரணமாக தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இதுதொடர்பாக பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா வைரஸ் காரணமாக சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தாக்கத் தொடங்கியிருக்கிறது?

என்னையும், அனைத்து எம்.எல்.ஏக்களையும் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

முன்னதாக சட்டமன்றத்தில் பார்வையாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சட்டமன்ற நிகழ்ச்சிகளை காண வர வேண்டாம் என்று சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாள்தோறும் சட்டமன்ற கூட்ட அரங்கை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி