ஆப்நகரம்

மதுசூதனனை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை: நத்தம் விஸ்வநாதன்

மதுசூதனனை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

TNN 10 Feb 2017, 3:14 pm
சென்னை: மதுசூதனனை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no power to remove madusudhanan from admk says natham viswanathan
மதுசூதனனை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை: நத்தம் விஸ்வநாதன்


தமிழக அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனனை நீக்கி, பொதுச் செயலாளர் சசிகலா உத்தரவிட்டார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். நேற்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மதுசூதனன் களம் புகுந்தார். இது தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்ட விதிகளின்படி, மதுசூதனனை நீக்கும் அதிகாரம் சசிகலாவிற்கு இல்லை என்று குறிப்பிட்டார். சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே இருப்பதாகவும், அதனால் மதுசூதனன் நீக்கம் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

No power to remove Madusudhanan from ADMK says Natham Viswanathan.

அடுத்த செய்தி