ஆப்நகரம்

தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது

தனியார் பள்ளிகளில், வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Jul 2018, 6:42 pm
தனியார் பள்ளிகளில், வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil images


மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு கட்டயமாகியுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்களை நீட் பயிற்சிக்கு சேர கட்டாய படுத்தக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தவிர நீட் பயிற்சிக்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு அங்கீகரித்த பாடங்களை மட்டுமே தனியார் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நேரங்களில் பள்ளி பாடங்கள் மட்மே நடத்தபட வேண்டும் என்றும் நீட் போன்ற தகுத்தேர்வுக்கான பாடங்களை நடக்கக்கூடாது என்று முன்பே அறிவிக்கப்படுள்ளது.

அடுத்த செய்தி