ஆப்நகரம்

பிளான் ஏ இல்லன்னா பிளான் பி; அதுவும் இல்லன்னா தனிக்கட்சி- ஓபிஎஸ் புது வியூகம்!

சசிகலாவை எதிர்த்து களம் இறங்கியுள்ள ஓபிஎஸ், தேவைப்பட்டால் தீபா உடன் இணைந்து தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

TOI Contributor 8 Feb 2017, 1:45 pm
சசிகலாவை எதிர்த்து களம் இறங்கியுள்ள ஓபிஎஸ், தேவைப்பட்டால் தீபா உடன் இணைந்து தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil no problem i have many options ops keep rocking
பிளான் ஏ இல்லன்னா பிளான் பி; அதுவும் இல்லன்னா தனிக்கட்சி- ஓபிஎஸ் புது வியூகம்!


தமிழக முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இடையிலான மோதல் கடுமையாக மாறியுள்ளது. இருவருமே எம்எல்ஏ.,க்கள் ஆதரவை திரட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால், அதிமுக.,வின் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என தனித்தனிப் பிரிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் முகாமில் அதிமுக.,வின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தஞ்சம்புக தொடங்கியுள்ளனர். அதிமுக எம்எல்ஏ.,க்கள் பெரும்பாலானோரை சசிகலா தன் பக்கம் மிரட்டி, வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், பன்னீர்செல்வத்தைப் பார்க்க, முன்னாள் எம்.பி.,க்கள், அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் தொடர்ந்து வந்தபடியே உள்ளனர். எம்எல்ஏ.,க்கள் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பதைவிட, தமிழக அளவில் தனக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை, பன்னீர்செல்வம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தன்னைச் சந்திக்க வருவோரிடம் அடுத்து என்ன செய்யலாம் எனவும் அவர் கேட்கிறார். அத்துடன், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை தன்பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அவர் தொடங்கியுள்ளார்.

இதுவரையிலும், 40 எம்எல்ஏ.,க்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கூறியுள்ளதாக, தெரிகிறது. எனினும், அனைத்து எம்எல்ஏ.,க்களையும் அவர் சந்தித்துவிடக்கூடாது என, சசிகலா தரப்பு தடை போட்டு வருகிறது.

இதனால், ஆளுநரை சந்தித்து, ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாகக் கூறலாமா அல்லது சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தலாமா இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக, ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்தி, மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா எனப் பல விதங்களில், ஓ.பன்னீர்செல்வம் வியூகம் வகுத்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

No problem I have many options: OPS keep rocking

அடுத்த செய்தி