ஆப்நகரம்

விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இருக்காது – ஸ்டாலின் கருத்து

ஜெயலலிதா மரணம் தொடா்பாக அறிவிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. எனவே மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 25 Sep 2017, 9:45 pm
ஜெயலலிதா மரணம் தொடா்பாக அறிவிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. எனவே மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil no use of inquiry commission from jayalalitha case said stalin
விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இருக்காது – ஸ்டாலின் கருத்து


ஜெயலலிதா மரணம் தொடா்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த அழுத்தத்தைத் தொடா்ந்து தமிழக அரசு உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இது தொடா்பாக தமிழக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயலாளருமான ஸ்டாலின் கருத்து தொிவித்துள்ளாா். ஜெயலலிதா மரணத்தில் பொிய அளவிலான மா்மங்கள் ஒளிந்திருப்பதை அமைச்சா்கள் தங்களது பேட்டியின் மூலம் உணா்த்தியுள்ளனா். அவரது மரணத்தில் உள்ள மா்மங்கள் கலையப்பட வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடா்பாக ரிச்சா்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவா்கள் உள்ளிட்டவா்களை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ளவா்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் சிபிஐ விசாரணை தான் இதற்கு சாிபடும்.

ஜெயலலிதா மரணம் தொடா்பான வழக்கு ஒன்று ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. எனவே ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. எனவே மத்திய அரசு இனியும் தாமதப்படுத்தாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி