ஆப்நகரம்

திமுகவிற்கு வாக்களித்தால் எந்த பிரயோஜனமும் இல்லை- வாக்குச் சேகரிப்பில் ஏசி சண்முகம்!

வேலூர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஏசி சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Samayam Tamil 17 Jul 2019, 9:33 am
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதில் திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியதாக வீடியோ ஆதாரங்கள் வெளியாகின.
Samayam Tamil AC Shanmugam


இதையடுத்து வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் மக்களவை தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மீண்டும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் வேலூரில் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தனது முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ஏசி சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த முறை போன்று தற்போதும் திமுக தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்துங்க; அப்புறம் நிதி தறோம்- தமிழகத்திடம் மத்திய அரசு தடாலடி!

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதாவது 60 இடங்களில் பணத்தை மறைத்து வைத்திருக்கின்றனர். அதில் ஓரிடத்தில் மட்டும் ரூ.27 லட்சம் சிக்கியிருக்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு- மத்திய அரசு அலட்சிய பதில்!

இதுவொரு அரசியல் கட்சிக்கு அழகல்ல. வாக்குறுதிகள் அளித்து வாக்குகளைக் கேளுங்கள். ஏன் மீண்டும் பணம் கொடுக்க முயற்சிக்கிறீர்கள்? இதனால் மீண்டும் தேர்தல் தடைபட நேரிடும்.

சூர்யாவை கட்டம் கட்டி எதிர்க்கும் கூட்டணி கட்சிகள்; தடாலடியாக ஆதரவுக் கரம் நீட்டிய அன்புமணி!

இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று திமுகவை கேட்டுக் கொள்கிறேன். நான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் தான், வேலூர் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து தர முடியும். திமுகவிற்கு வாக்களித்தால் எந்தவொரு நன்மையும் ஏற்படாது என்று ஏசி சண்முகம் கூறினார்.

அடுத்த செய்தி