ஆப்நகரம்

போலீசார் கட்டுபாட்டில் எம்ஜிஎம் மருத்துவமனை..! சரீர இடைவெளியின்றி குவியும் கூட்டம்

உடல்நல குறைவால் எஸ்பிபி இன்று உயிரிழந்ததையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த சென்னை எம்ஜிம்எம் மருத்துவமனையின் முன்பு பொதுமக்களும், ஊடக துறையினரும் சரீர இடைவெளியின்றி குவிந்துள்ளனர்.

Samayam Tamil 25 Sep 2020, 4:07 pm
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையின் மூலம் தேறி வந்த அவரது உடல்நிலை ஆகஸ்ட் 14ம் தேதி மோசமடைந்தது. செப்டம்பர் 4ம் தேதி அவருக்கு பரிசோதனை செய்தபோது கோவிட் 19 நெகட்டிவ் என்று தெரிய வந்தது.
Samayam Tamil chennai mgm hospital


கொரோனாவில் இருந்து மீண்டும் கூட, பிந்தைய பாதிப்புகளால் அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், நேற்றைய தினம் எஸ்பிபி அபாய கட்டத்தில் உள்ளதாகவும், மேற்படி சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து லைஃப் சப்போர்ட் சிகிச்சையில் இருந்த அவர் இன்று பிற்பகல் 1 மணி அளவில் உயிரிழந்தார்.

எஸ்பிபி கவலைக்கிடமாக இருப்பதான செய்தி வந்த நேற்றைய தினம் முதலே எம்ஜிஎம் மருத்துவமனை வாசலில் ஊடக துறையினரும், பொதுமக்களும் குவிய துவங்கினர். இன்று அவரது இறப்பு செய்தி வந்த பிறகு கூட்டம் மேலும் அதிகமாகியுள்ளது.


மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் எஸ்பிபியின் உடல் இன்னும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான செய்தியாளர்களும், பொதுமக்களும் மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளதால் சரீர இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. உடல் கொண்டு வரப்படும்போது, தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கவும் தொடர்ந்து போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.பி.யின் பாடல்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்: ரஜினி வருத்தம்

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரு மாதங்களாக உயர்தர சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபியை மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலையில், அவரை குறித்து அங்கு குவிந்துள்ள மக்கள் கொஞ்சம்கூட சரீர இடைவெளியை பின்பற்றாமல் அதை காற்றில் பறக்க விட்டுள்ளனர். மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் முதல் எஸ்பிபியின் இறப்பு வரை முக்கியமான நிகழ்வுகளில் சரீர இடைவெளியை பின்பற்றாமலும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமலும் மக்கள் தொற்றுவை பரப்பி வருவது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி