ஆப்நகரம்

Karunanidhi: கருணாநிதி உடல்நிலை சீரானதால், இயல்பு நிலைக்கு திரும்பிய திமுக!

திமுக தலைவரின் உடல்நிலை சீரானதால், அக்கட்சி இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 3 Aug 2018, 4:14 pm
சென்னை: திமுக தலைவரின் உடல்நிலை சீரானதால், அக்கட்சி இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil Karunanidhi


திமுக தலைவர் கருணாநிதியின் உடல், வயது மூப்பின் காரணமாக நலிவடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால், உடனே சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, மருத்துவர்களின் தீவிர முயற்சியால் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 24 மணி நேரமும் கருணாநிதியை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

உடல்நிலை சீராகி வருவதால், தொண்டர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லுமாறு கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் நேற்று இரவு கட்சி தலைமையகத்திற்கு சென்று வழக்கமான பணிகளைச் செய்தார். அப்போது பிராமணர் அல்லாத தமிழ்நாட்டின் முதல் அர்ச்சகரை சந்தித்து பேசினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 213வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருக்கிறது.

இந்த சூழலில் வரும் 5ஆம் தேதி கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். அவர் பிற்பகல் 3.40 மணிக்கு புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படுகிறார்.

Normalcy returns to DMK as Karunanidhi’s health condition remains stable.

அடுத்த செய்தி