ஆப்நகரம்

பாடப்புத்தக அதிர்ச்சி - தென்னிந்திய வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் வட இந்தியா!

மதுரை: வட இந்திய வரலாற்று புத்தகங்கள் குறித்து, ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

TIMESOFINDIA.COM 25 Jan 2019, 3:12 am
மதுரையில் அமைந்துள்ள மதுரா கல்லூரியில் “இலக்கியம் மற்றும் சமூகம்” என்ற பெயரில் 2 நாட்கள் தேசிய கருத்தரங்கள் நடைபெற்றது. அதில் ஹிமாச்சல் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குல்திப் சந்த் அக்னிஹோத்ரி கலந்து கொண்டார்.
Samayam Tamil VC


இந்த கருத்தரங்கில் பேசிய அவர், இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பவர்களாக தமிழ் மக்கள் இருந்தாலும், இதுபற்றி வட இந்திய வரலாற்று புத்தகங்களில் அரிதாகவே தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்தியாவின் வரலாறு, குணங்கள், பண்புகள் உள்ளிட்டவை இந்திய வரலாற்றில் சேர்க்கப்படவில்லை.

இந்தியாவின் வரலாறு என்றால், அது வட இந்தியாவை மட்டும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் தென்னிந்திய மற்றும் வடகிழக்கு இந்தியா குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. வட இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை முகலாயர்கள், சுல்தான்கள் மற்றும் சிலர் மட்டுமே அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள புத்தகங்கள் மற்றும் இலக்கியப் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு தமிழ் புத்தகம் ஒன்று, பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

நேரடியான மொழிபெயர்ப்பில் உண்மையான படைப்பின் தன்மை ஒருபோதும் குறைந்துபோகாது என்று குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி