ஆப்நகரம்

ரஜினி மட்டுமல்ல, 7 கோடி தமிழர்களும் பாஜகவில்! பொன்னார் பேராசை!

நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல, தமிழகத்தின் 7 கோடி மக்களும் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எனது ஆசை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TNN 20 Aug 2017, 12:13 pm
நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல, தமிழகத்தின் 7 கோடி மக்களும் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எனது ஆசை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil not only rajinikanth i want all tamil people to join bjp says pon radhakrishnan
ரஜினி மட்டுமல்ல, 7 கோடி தமிழர்களும் பாஜகவில்! பொன்னார் பேராசை!


இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்னாரிம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லையே.” என்றார்.

தொடர்ந்து ரஜினி பாஜகவில் சேரப்போகிறாரா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, “ரஜினி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஏழு கோடி மக்களும் பாஜகவில் சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்றார்.

அதிமுக அணிகள் இணைப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, கழகங்கள் இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி