ஆப்நகரம்

சம ஊதியம் வழங்கும் உத்தரவை மதிக்காத அரசுக்கு செவிலியர்கள் கண்டனம்

செவிலியர்களுக்கு பணிமாற்று ஆணையையும் சம ஊதியத்தையும் உடனே வழங்கக்கோரி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Samayam Tamil 15 Dec 2018, 7:31 pm
வேலூர் மாவட்டம், பொய்கை கிராமத்தில் தமிழ்நாடு எம்.ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில பொது செயலாளர் சுபின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் வனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Samayam Tamil 2


மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவருக்கும் மற்ற செவிலியர்களுக்கு வழங்கும்வதைப் போல சம ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு ஊதியம் வழங்காமல் முடிவினையும் அறிவிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

செவிலியர்களுக்கு பணிமாற்று கலந்தாய்வு நடைபெற்ற பின்பும் 8 மாதங்களாக பணிமாற்று ஆணையை வழங்கவில்லை. உடனடியாக அந்த பணிமாற்று ஆணையை வழங்க வேண்டும்.

செவிலியர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் ஒரே சீரான பணிநேரத்தைக் கடைபிடிக்க வேண்டும். வட மாவட்டங்களில் செவிலியர்கள் 16 மணிநேரம் வரையில் பணியாற்றுகின்றனர். கர்ப்பிணி செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை முறையாக வழங்க வேண்டும்.

புதியதாக உருவாக்கப்படும் 839 துணை சுகாதார நிலையங்களிலும் பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும். செவிலியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை மாற்றம் செய்வதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த செய்தி