ஆப்நகரம்

சூப்பர் நியூஸ்: வந்தது பணி நிரந்தர ஆணை! செவிலியர்கள் உற்சாகம்!

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 4 May 2021, 11:18 am
கொரோனா பெருந்தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தங்களது உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர் மருத்துவர்களும் செவிலியர்களும்.
Samayam Tamil tn nurses


இந்த சமயங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இதனால் தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலரை தொடர்ந்து பணியமர்த்தி வருகிறது.

ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு அறிவிப்பு!

இந்நிலையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த 1212 செவிலியர்கள் நிரந்த பணிக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2015-16ஆம் ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்த செவிலியர்களுக்கு தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.

ஏன் திடீர் ஊரடங்கு அறிவிப்பு? ஸ்டாலின் காட்டிய க்ரீன் சிக்னல்!

பணி நிரந்தரம் செய்யப்பட்ட 1212 செவிலியர்கள் மே 10ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணிக்கு சேர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

அடுத்த செய்தி