ஆப்நகரம்

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ம் தேதி முடிவு: ஓபிஎஸ் பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Samayam Tamil 21 May 2019, 12:07 pm
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக-வின் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து, அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அதில் முடிவு செய்யப்படும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா.
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா.? ஒபிஎஸ் பதில்


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அனைத்துக் கட்ட தேர்தலும் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அன்று, தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளிவருகின்றன. இந்தியாவில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம், ஒருவேளை பாஜக வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தால், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி வெளிவருகின்றன. அன்று அதிமுக ராயப்பேட்டை அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும். தேர்தல் முடிவுகளை பொறுத்து மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். டெல்லியில் நடக்கும் இதற்கான கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அடுத்த செய்தி