ஆப்நகரம்

முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு இப்படியும் ஒரு யோகம்

இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் கொடியேற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

TNN 8 Jan 2017, 12:32 pm
சென்னை: இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் கொடியேற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil o panneerselvam is going to be the first chief minister of tamilnadu to load the national flag on republic day
முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு இப்படியும் ஒரு யோகம்


தமிழகத்துக்கு நிரந்தமான கவர்னர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். அவர் மகாராஷ்டிர மாநில ஆளுநர் என்ற முறையில் குடியரசு தினத்தில் மும்பையில் கொடியேற்ற உள்ளார். இதனால் அதே நாளில் சென்னையில் அவர் கொடியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநருக்கு பதிலாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறு ஆளுநர் மாளிகையிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் குடியரசு தினத்துன்று தேசியக் கொடியேற்றும் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை ஓ.பன்னீர் செல்வம் பெறவிருக்கிறார்.

அடுத்த செய்தி