ஆப்நகரம்

மக்கள் மனசை அறிய, ஓபிஎஸ் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் ஒரு மாதகாலம் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 1 May 2017, 12:28 pm
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் ஒரு மாதகாலம் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil o panneerselvam to roam around tamilnadu for a month
மக்கள் மனசை அறிய, ஓபிஎஸ் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம்


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக அணிகள் பேச்சுவார்த்தை மூலம் இணையும் சூழல் ஏற்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 5ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் ஓபிஎஸ் ஒரு மாதகாலம் இச்சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்று தகவல் கிடைத்துள்ளது.

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து மக்களின் கருத்துக்களைக் கேட்கும் பொருட்டு இந்த பயணத்தை திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி