ஆப்நகரம்

எடப்பாடியை முந்தும் ஓ.பி.எஸ்; பிரதமரை சந்திக்க போட்டா போட்டி...!

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்க்கு ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் டெல்லி செல்கிறார்.

TNN 22 Jun 2017, 7:56 pm
சென்னை: குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்க்கு ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் டெல்லி செல்கிறார்.
Samayam Tamil o panneerselvam will go delhi to meet pm
எடப்பாடியை முந்தும் ஓ.பி.எஸ்; பிரதமரை சந்திக்க போட்டா போட்டி...!


வரும் ஜூலை 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பீகார் மாநில ஆளுநராக இருக்கும் ராம்நாத் தலித் பிரிவைச் சேர்ந்தவர். அவர் வரும் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தை ஆளும் அதிமுகவிடம் பிரதமர் மோடி, ஆதரவு கோரினார். இதுகுறித்து பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, முதலமைச்சர் பழனிச்சாமியிடம் ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார். அதிமுக அம்மா அணி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு, ராம்நாத்தை ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

விரைவில் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து, தனது ஆதரவை அளிக்க உள்ளதாகவும் கூறினார். இந்த சூழலில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும், பாஜக வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்நிலையில் தனது ஆதரவை தெரிவிக்க, இன்று இரவே விமானம் மூலம் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அதிரடியாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

O PanneerSelvam will go Delhi to meet PM.

அடுத்த செய்தி