ஆப்நகரம்

தஞ்சையில் அக்.,9-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 5 Nov 2016, 3:50 pm
தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil oct 9th local holiday in thanjavur
தஞ்சையில் அக்.,9-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


உலக புகழ் பெற்று விளங்கும் பெரிய கோயிலை எழுப்பிய பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்த நாளை, சதய விழாவாகக் கொண்டாடி பெருமை சேர்த்து வருகிறது தமிழக அரசு. அவருடைய நட்சத்திரம் சதயம். அதனால் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 1031-வது ஆண்டு சதய விழா வருகிற 8, 9-ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இதனை முன்னிட்டு முன்னிட்டு வருகிற 9-ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Oct 9th local holiday in Thanjavur

அடுத்த செய்தி