ஆப்நகரம்

ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு: கைகலப்புக்கு இடையே கை தட்டல் சத்தம்!

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2021, 4:48 pm
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil ops eps


அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. அதில் தேர்தல் விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அதற்கு மறுநாள் அதிமுக உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தலைமை அலுவலகத்தில் மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அடுத்த பிரதமர் யார்? ஸ்டாலின் தேர்ந்தெடுக்கும் பாதை எது?
ஆனால் அங்கு சென்று வேட்பு மனு கேட்டவரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கி அலுவலகத்தைவிட்டு வெளியே தள்ளினர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே டிசம்பர் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு: தொடரும் பதற்றம்!
“அதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. சாதாரண தொண்டர் கூட கட்சியில் பெரிய பொறுப்புகளுக்கு வரலாம், முதலமைச்சராகலாம், நானே சாட்சி என பேசி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தேர்தலில் போட்டியிட மனு கேட்ட தொண்டரைக்கூட அடித்து துரத்தும் அவல நிலைதான் உள்ளது” என்கிறார் ரத்தக்காயம் அடைந்த ரத்தத்தின் ரத்தம்.

அடுத்த செய்தி