ஆப்நகரம்

எண்ணூர் கடலில் மீண்டும் எண்ணெய் கசிவா! வெகுண்டெழும் மீனவர்கள்!!

எண்ணூர் கடலில் மீண்டும் எண்ணெய் கசிவா! வெகுண்டெழும் மீனவர்கள்!!

TOI Contributor 3 May 2017, 5:02 pm
எண்ணூர் கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் பதித்து கடல் வளம் மற்றும் மீன் வளத்தை அழித்து வரும் எண்ணெய் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil oil leakage in chennai ennore sea shore
எண்ணூர் கடலில் மீண்டும் எண்ணெய் கசிவா! வெகுண்டெழும் மீனவர்கள்!!


வெளிநாட்டு கப்பல் ஒன்று சென்னை எண்ணூர் அருகே விபத்திற்கு உள்ளாகி கடல் நீர் முழுவதும் கச்சா எண்ணெய் கலந்து அதனை பக்கெட் கொண்டு அகற்ற முயன்றது எல்லோரும் அறிந்தது தான். அந்த விபத்து குறித்தே விசாரணை, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிபிசில் நிறுவனம் எண்ணூர் கடற்கரையில் கச்சா எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. இந்த குழாய்களின் வழியே கசிவு ஏற்படும் பட்சத்தில் கடலின் மீன்வளம் அனைத்தும் அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது.

இதனை கண்டித்து திருவொற்றியூரில் மீனவர் சங்கங்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தை சேர்ந்த பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கச்சா எண்ணெய் குழாய்களை கடலில் அமைத்து பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணெய் நிறுவனத்தில் செயலை கண்டித்து மீனவர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி