ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? அரசை வலியுறுத்தும் தொழிற்சங்கம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

Samayam Tamil 4 May 2022, 6:55 am
திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
Samayam Tamil tn transport


இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம்... மெலிண்டாவின் க்ரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் பில் கேட்ஸ்!
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் விரைந்து இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓய்வூதியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரா, துணை முதல்வரா? -குழப்பத்தில் உடன்பிறப்புகள்!
பணியாளர் பற்றாக்குறை காரணமாக சில இடங்களில் பேருந்து இயக்கம் தடைபட்டதாக தெரிகிறது. எனவே, காலிப் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். 2003ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்கள் இறந்து போனால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. எனவே அந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி