ஆப்நகரம்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமலாகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்

Samayam Tamil 19 Mar 2020, 2:52 pm
சென்னை: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர், 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஜனவரி 1ஆம் தேதி இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஹேண்ட் சேனடைசர் எல்லோருக்கும் அவசியமில்லை!

தமிழகத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்த தமிழக அரசு இதற்கான அரசாணை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35,233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி