ஆப்நகரம்

தொடர் மழையால் புதிதாக தோன்றிய அருவிகள்.!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலைப்பகுதி பச்சைப்பசேலென மாறியதோடு, புதிதாக அருவிகளும் தோன்றியுள்ளன.

TNN 25 Nov 2017, 4:07 pm
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலைப்பகுதி பச்சைப்பசேலென மாறியதோடு, புதிதாக அருவிகளும் தோன்றியுள்ளன..
Samayam Tamil ooty looks like greenery because of heavy rain
தொடர் மழையால் புதிதாக தோன்றிய அருவிகள்.!


கடந்த சில மாதங்களாக உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மலைப்பாதையில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலைப்பகுதி பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது.

மலைப்பாதையில் புதியதாக தோன்றிய அருவியை சாலையில் செல்வோர் கண்டு ரசிக்கின்றனர். அதே நேரத்தில் சில சுற்றுலாப் பயணிகள் ஆர்வ மிகுதியில் அடிவாரத்தில் விழும் நீர் வீழ்ச்சியில் வழுக்குப்பாறைகள் மீதும் ஏறி பாதுகாப்பின்றி புகைப்படம் எடுத்து வருகின்றனர். விபத்து ஏற்படும் முன் தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி