ஆப்நகரம்

இபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: ஓபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல்!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்

Samayam Tamil 18 Aug 2022, 7:51 pm
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. அதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதவிர, கட்சியின் விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்துள்ளார்.
Samayam Tamil ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்


இதனிடையே, அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தையே நாட அறிவுறுத்தியது. அதன்படி, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

“ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். மீண்டும் புதியதாக பொதுக்குழுவை கூட்டலாம். அதற்காக சட்ட ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதுவரை ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும்.” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படி பேசக் கூடாது: சீமான் ஆவேசம்... பிடிஆர் பதிலடி!
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என ஓபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த செய்தி