ஆப்நகரம்

திண்டுக்கல்லில் ஓபிஎஸ், அதிமுக அம்மா அணி ஆதரவாளர்களின் பேனர் கிழிப்பு: பெட்ரோல் குண்டுவீச்சால் பரபரப்பு

திண்டுக்கல்லில், ஓபிஎஸ் மற்றும் அதிமுக அம்மா அணி ஆதரவாளர்களின் பேனர் கிழிக்கப்பட்டதோடு, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 24 Jun 2017, 5:32 pm
திண்டுக்கல்லில், ஓபிஎஸ் மற்றும் அதிமுக அம்மா அணி ஆதரவாளர்களின் பேனர் கிழிக்கப்பட்டதோடு, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ops and minister dindigul srinivasan supporters clashed
திண்டுக்கல்லில் ஓபிஎஸ், அதிமுக அம்மா அணி ஆதரவாளர்களின் பேனர் கிழிப்பு: பெட்ரோல் குண்டுவீச்சால் பரபரப்பு


குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக.,வுக்குள் தற்போது 3 கோஷ்டிகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கோஷ்டிகள் சார்பாக, திண்டுக்கல்லில் இஃப்தார் நோன்பை முன்னிட்டு, பேனர்கள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், இன்று காலை இந்த பேனர்களை ஒருவர் மாற்றி, ஒருவர் கிழித்துக் கொண்டதோடு, மோதலிலும் ஈடுபட்டுள்ளனர். இதில், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசனின் ஆதரவாளர்களைப் பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, திண்டுக்கல் பேகம்பூர் பங்களா மேட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் என்ற இக்பால். இவர், அங்குள்ள 38-வது வார்டு அதிமுக செயலாளராக உள்ளார். அவரது வீட்டில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதுபற்றியும் போலீசார் வழக்குப் பதில செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில், ஒருவர் மாற்றி ஒருவர் என, வரிந்துகட்டிக் கொண்டு, பாஜக.,வுக்கு, அதிமுக.,வின் 3 கோஷ்டியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவே, பேனர் கிழிப்பு மற்றும் பெட்ரோல் குண்டுவீச்சுக்கு காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tamilnadu: OPS and Minister Dindigul Srinivasan supporters clashed.

அடுத்த செய்தி