ஆப்நகரம்

அதிமுக திராவிடத்தை கைவிடவில்லை: ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மதவெறி நாட்டுக்கே ஆபத்து என்றார். மேலும் தாங்கள் ஒருபோதும் திராவிடத்தை விடவில்லை என்றும் கூறினார்.

Samayam Tamil 26 Jun 2018, 11:35 pm
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மதவெறி நாட்டுக்கே ஆபத்து என்றார். மேலும் தாங்கள் ஒருபோதும் திராவிடத்தை விடவில்லை என்றும் கூறினார்.
Samayam Tamil pic


சட்டபேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அறிவித்த திட்டங்களின் நிலை என்ன? அவை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? என்று கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி அரசு வெளியிட்ட ஆணைகளை பட்டியிலிட்டார். உடனே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், இதற்கு முன் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லாமல், “முன்னாள் முதல்வரும் நீங்களும் அறிவித்த திட்டங்களைச் சொன்னீர்கள். இடையில் ஒருவர் முதல்வராக இருந்தாரே அவரை மறந்துவிட்டீர்களே” என்றார்.

இதற்கு முதல்வர் பழனிசாமி, “எங்களது ஒற்றுமையை பார்த்து அண்ணனுக்கு கண் உறுத்துகிறதா? யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்போம்” என்றார்.

பின் மு.க.ஸ்டாலின், “இது திராவிட மண்; மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது” என தெரிவித்தார்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓபிஸ், மதவெறி நாட்டுக்கே கேடு; நாங்கள் ஒருபோதும் திராவிடத்தை விடவில்லை என தெரிவித்தார்.

அடுத்த செய்தி