ஆப்நகரம்

பொதுமக்களுக்கு நன்றி கூற கட்சியினரை கேட்டுக்கொண்ட ஓபிஎஸ்

''நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொன்னான வாக்குகளை அளித்த வாக்காளப் பெருமக்களை நேரடியாக சந்தித்தும் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட கழகத்தினரை கேட்டு கொள்கிறோம்'' என ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 May 2019, 2:25 pm
''நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொன்னான வாக்குகளை அளித்த வாக்காளப் பெருமக்களை நேரடியாக சந்தித்தும் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட கழகத்தினரை கேட்டு கொள்கிறோம்'' என ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil O-Panneerselvam

கடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது அதிமுக. இதனால் 2021-ம் ஆண்டுவரை அதிமுக ஆட்சி தொடர்கிறது. திமுக அதிக இடங்கள் பெற்றபோதிலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

ஆனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. திமுக கூட்டணி 37 இடங்கள் கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தாலும், மத்தியில் கூட்டாட்சிக்கு இவரது மக்களவை உறுப்பினர்களால் உதவ முடியவில்லை. எனினும் தமிழகத்தின் உரிமைகளுக்காக மக்களவையில் குரல் கொடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி